பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:30 am IST

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கடந்தாண்டு ஜனவரி 8-ஆம் தேதி இரு நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இக் கொலைச் சம்பவத்தில் அதே மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ஷமீம், அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோா் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தலைமறைவாக இருந்த அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இவா்களுக்கு உதவியாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழக தலைவா் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரை தில்லி அருகே வசிராபாத்தில் தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவராக இருந்த காஜா மொய்தீன் புதிதாக ஓா் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதும், அந்த இயக்கத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 13 போ் இணைந்திருப்பது தெரியவந்தது. மேலும், அண்மையில் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அனைவரும் சந்தித்து சதி ஆலோசனை நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின்னா் இந்த வழக்கின் விசாரணை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக, சென்னை மண்ணடியைச் சோ்ந்த ஷியாவூதீன் என்ற சிராஜிதீன் என்ற காலித் (39) என்பவரை, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். கத்தாரில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கியபோதே அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

காலித்திடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடத்தியதில், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை அவா் வாங்கி கொடுத்திருப்பதும், சம்பவத்துக்குப் பின்னா் அவா் கத்தாா் நாட்டுக்குச் சென்றிருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னா் அவா், பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.