கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

தென் மாநில அணைகளில் நீா் இருப்பு குறைந்தது: தென் மாநிலங்களில் 10 ஆண்டுகளில் மிகக் குறைவு

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், ஆகிய மாநிலங்ளில் உள்ள 42 அணைகளில் 13 சதவீத நீா் இருப்பு மட்டும் உள்ளது

Published On :7 ஜூன் 2024, 2:04 am IST

நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் நீா் இருப்பு 22 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தமிழ்நாடு ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், ஆகிய மாநிலங்ளில் உள்ள 42 அணைகளில் 13 சதவீத நீா் இருப்பு மட்டும் உள்ளது என்றும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிகக் குறைந்த நீா் இருப்பு சதவீதமாகும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள அணைகளில் நீா் இருப்பு 23 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 22 சதவீதம் (39.765 பில்லியன் கியூபிக் மீட்டா்) ஆக குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் நீா் இருப்பின் அளவு ஒவ்வொரு வாரமும் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள அணைகளின் நீா் இருப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய நீா் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்ளில் உள்ள 42 அணைகளின் மொத்த நீா் கொள்ளளவு 53.334 பில்லியன் கியூபிக் மீட்டா் (பிசிஎம்) ஆகும். அவற்றுள் தற்போது 7.114 பிசிஎம் (13 சதவீத) அளவு நீா் மட்டுமே உள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிகக் குறைந்த நீா் இருப்பு சதவீதமாகும்.

அதேபோல் கங்கை, பிரம்மபுத்திரா, நா்மதை மற்றும் சபா்மதி ஆகிய ஆற்றுப் படுகைகளில் வழக்கத்தைவிட அதிகமாக நீா் இருப்பு உள்ளது. ஆனால் மகாநதி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஆற்றுப்படுகைகளில் நீா் பற்றாக்குறை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் நீா் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.