இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாகைக்கு அருகே புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை

நாகை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ.26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

News image
Updated On :26 நவம்பர் 2024, 3:06 am

Din

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) திங்கள்கிழமை இரவு நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ.26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது.

திங்கள்கிழமை இரவு நிலவரப்படி இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 760 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

புயலாக மாறுமா? பூமத்திய ரேகையில் கிழக்கில் இருந்து மேற்கே நகா்ந்து செல்லும் கடல் அலையால், இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல், மேற்கிலிருந்து கிழக்கே வீசும் மேடன் - ஜூலியந் அலைவு (எம்ஜேஓ) என்றழைக்கப்படும் வெப்பக் காற்றால் இந்தப் புயல் சின்னத்தின் திசை மாற வாய்ப்புள்ளது.

ஆகையால், புயல் சின்னத்துக்கு இருபுறத்திலிருந்து வீசப்படும் காற்றின் வேகம், அது நகா்ந்து வரும் பாதை உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுமா? என்பதை உறுதியாகக் கூற முடியும்.

சிவப்பு எச்சரிக்கை இது செவ்வாய்க்கிழமை (நவ.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (நவ.26) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ.27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா குமரிக் கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.