பல நூற்றாண்டுகளை கடந்து வரும் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் 

திருவாடானை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பல
பல நூற்றாண்டுகளை கடந்து வரும் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் 

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகளைக்  கடந்து எழுந்தருளி அருள் பாலிக்கும் கிறிஸ்துவ மக்களின் புனித திருத்தலமாகப் புனித அருளானந்தர் ஆலயம் விளங்கி வருகிறது. இவ்வாலயம் புனித அருளானந்தர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஓரியூர் திட்டை எனும் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு உயிர் துறந்தார். அன்றிலிருந்து இப்பகுதி மக்களுக்கு புனித அருளானந்தர் அருளாசி வழங்கி வரும் சிறப்பு திருத்தலமாக உள்ளது. 

புனித அருளானந்தரின் இயற்பெயர் ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ்பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த பிரேசிலின் ஆளுநராக இருந்தபோது பிறந்தவர். 1662-ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1673ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக தென்னிந்தியாவின் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றிக் கொண்டார். அன்றைய மன்னரால் முறையிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். மீண்டும் 1690இல் மீண்டும் மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய மேலாண்மையற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார். தனது  மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார். இதனால் அருளானந்தருக்கு தேசத்துரோகக் குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டது.  ஜனவரி 11 ஆம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார். 

ஜனவரி 31ஆம் நாள் ஓரியூர் பாம்பாற்றங்கரையில் கொல்லப்பட வேண்டு என அரசு உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.

புனிதர் பட்டம் தொகு ஜூன் 22, 1947 அன்று, உரோம் நகரில், பனிரெண்டாம் பயஸ் ஜான் டி பிரிட்டோவை புனிதராக அறிவித்தார். இவரது திருவிழா பிப்ரவரி 4ந் தேதி கொண்டாடப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com