பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ஹிந்தியில் ரீமேக் ஆகும் "மிளகா'

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள "மிளகா' படம் வரும் ஜூன் 25-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ், பூங்கொடி, சுஜா, இயக்குநர்கள் ஜெகன், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளன

News image
Updated On :27 டிசம்பர் 2023, 9:51 pm IST

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள "மிளகா' படம் வரும் ஜூன் 25-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ், பூங்கொடி, சுஜா, இயக்குநர்கள் ஜெகன், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவிமரியா இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இதன் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை படத்தின் நாயகன் நட்ராஜ், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜான்ஆபிரஹாமுக்குத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார். படத்தைப் பார்த்து

வியந்த ஜான்ஆபிரஹாம் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம்

தெரிவித்துள்ளார். அதோடு பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனிடமும் உடனடியாகப் பேசி படத்தின் நாயகியாக நடிக்க அவரிடம் சம்மதம் பெற்றுள்ளார். மதுரைப் பின்னணியில் உருவான இந்தப் படம், ஹிந்தியில் கோவாவைப் பின்னணியாகக் கொண்டு தயாராகிறது. தமிழில் கதை, திரைக்கதையை உருவாக்கிய ரவிமரியா

ஹிந்தியிலும் அதே பொறுப்புகளை ஏற்கிறார். சுஜித் சர்க்கார் இயக்குகிறார். தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜ், ஹிந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார். "மிளகா' படத்தின் தெலுங்கு ரீமேக்கைத் தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுவே ஹிந்தி ரீமேக்கையும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.