லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் பத்திரிகை அதிபரின் மகன் பிரிட் ரெய்ட். மதிப்பும் செல்வாக்கும் நிறைந்த தன் அப்பா மீது மகனுக்கு அன்பு மரியாதையும் உண்டு. பிரிட்டின் கவலையற்ற வாழ்க்கையை தந்தையின் மர்மமான மரணம் உலுக்குகிறது. அந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தையும், மனிதர்களையும் கண்டுபிடிக்க புறப்படுகிறான் பிரிட். அதன் பின்னணியில் ஒரு நிழல் உலகம் இருப்பதை உணர்கிற பிரிட், குற்றவாளிகளை பிடிக்க அந்த நிழல் உலகத்தில் சேருகிறான். பிரிட்டுடன் அவனது சக போராளியாக காட்டோவை கை கோர்த்துக் கொண்டு வேட்டை தொடர்கிறது. இருவரும் அந்த நிழல் உலகத்தை எப்படி அழித்தார்கள் என்பதுதான் "தி க்ரீன் ஹார்னெட்' படத்தின் கதை. சேத்ரோகன், ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் முப்பரிமாண படமாக உருவாகியுள்ளது. இப்டத்தை சோனி பிக்சர்ஸ் விரைவில் வெளியிடுகிறது.