ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

காலமானார் நடிகர் பெரிய கருப்புத் தேவர்

 சென்னை, செப். 18: திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 18) காலமானார்.  கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, செவ்வாய்கிழமை ம

Updated On :

 சென்னை, செப். 18: திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 18) காலமானார்.

 கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, செவ்வாய்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

 சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இருந்த இவர் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தாலாட்டு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன், பூ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

 பெரிய கருப்புத் தேவரின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கருமாத்தூரில் புதன்கிழமை தகனம் செய்யப்படுகிறது.

 தொடர்புக்கு: 98404 75551, 98405 71480.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.