ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
‘முத்து’, ‘படையப்பா’, ‘பாபா’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களைத் தொடர்ந்து ரஜினி-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இதையொட்டி படத்தின் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம்.
இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை மறைந்த கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
‘கோச்சடையான்’ பாடல்கள் லிஸ்ட்:
1. ‘எங்கே போகுதோ வானம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
2. ‘மெதுவாகத்தான்’ என்ற துவங்கும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சாதனா சர்கமும் பாடியிருக்கிறார்கள்.
3. ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹரிசரணுடன் இணைந்து பாடியிருக்கிறார்.
4. ‘மணப்பெண்ணின் சத்தியம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார்.
5. ‘இதயம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். சீனிவாஸ், சின்மயி பாடியிருக்கிறார்கள்.
6. ‘எங்கள் கோச்சடையான்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். கோச்சடையான் டீமே பாடியிருக்கிறதாம்..
7. ‘மணமகனின் சத்தியம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஹரிசரண் பாடியிருக்கிறார்.
8. ‘ராணாஸ் டிரீம்ஸ்’ என்ற தீம் பாடலை லண்டன் சீஸன்ஸ் ஆர்கெஸ்ட்ரா பாடியுள்ளது.
9. ‘கர்ம வீரன்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், ஏ.ஆர்.ரைஹானாவும் பாடியிருக்கிறார்கள்.
முன்னதாக இதே ‘சத்யம்’ தியேட்டரில்தான் ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்பட்டது. இப்போது ‘கோச்சடையானின்’ பாடல்களும் இங்குதான் வெளியிடப்பட உள்ளது.
‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலை ஹரிசரணுடன் இணைந்து பாடியுள்ளார் ரஜினி. 1992ல் வெளியான ‘மன்னன்’ படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 22 வருடம் கழித்து ரஜினி பாடும் இரண்டாவது பாடல் இது. லதா ரஜினியும் ஒரு பாடலை பாடியுள்ளார். அதேசமயம், ரஜினிகாந்தும், லதா ரஜினிகாந்தும் ஒரே படத்தில் பாடல்களை பாடியிருப்பது இதுதான் முதல் முறை..!
சோனி நிறுவனத்தின் ஆடியோ விற்பனை வரலாற்றில் இந்த கோச்சடையான் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










