சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரோமஷன் ஆனவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் அப்படியே கிடைக்கும் படங்களில் சிறு, சிறு, வேடங்களில் தலை காட்டத் தொடங்கினார். அதில் கோலி சோடா திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தப் படத்திற்கு பின்னர் இமான் அண்ணாச்சிக்கு படங்கள் குவிந்து வருகிறதாம்.
அனைத்தும் காமெடி கேரக்டர்தான். தற்போது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில் இமான் அண்ணாச்சியையும் சூப்பர் ஸ்டார் ஆசை விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த பட்டைய கிளப்பணும் பாண்டியா, காதலைத்தவிர வேறொன்றுமில்லை படங்களின் டைட்டிலில் அவரை குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
அதுவும் தன்னுடைய பெயரை டைட்டிலில் போடும்போது “குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்” என்று போடும்படி வற்புறுத்துகிறாராம். ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு ஆசைப்படலாம்தான். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அதில் இப்போது இவருமா? இன்னும் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் கிளம்பி வருவார்களோ தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி வெள்ளி: திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

யானை வழித்தடங்களை மறைத்து கம்பிவேலிகள்: நடவடிக்கை எடுக்க வனத் துறைக்கு கோரிக்கை

உதகை அருகே புலி உயிரிழப்பு

பெருந்துறையில் பசுமையும், பெண்மையும் இணையும் விழா: அமைச்சர் விஜய் பாலாஜி பங்கேற்பு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



