

ஆர்யா நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் மது அருந்தும் காட்சிகள், மது அருந்துவது தொடர்பான வசனங்கள் உள்ளதால், இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியது. இது தொடர்பாக வணிக வரித்துறை செயலாளருக்கு அந்த அமைப்பு மனு அனுப்பியது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு வரிச்சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.