மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகுபலி படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு?

பிரமேம் பட திருட்டு டிவிடி விஷயத்தை முன்வைத்து ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள்.

News image
Updated On :11 ஜூலை 2015, 9:22 am

இன்று, பாகுபலி படம், உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆரவாரம் எல்லாம் கேரளாவில் இல்லை. அங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு 200 திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பாகுபலி, 50 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. காரணம், கேரளத் திரையுலகில் இப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புதான். மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தால் நேரடி மலையாளப் படத்துக்கு வருங்காலத்தில் பாதிப்பு வரும் என்பதால் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

கேரளாவில் பாகுபலி படத்தை குளோபல் யுனைடெட் மீடியா வெளியிடுகிறது. பெரிய அளவில் படம் வெளியிடப்படுவதால், இதற்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  ஏற்கெனவே தமிழ்ப் படமான ஷங்கரின் ஐ, கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதை கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அப்போது எதிர்க்காமல் விட்டதால் இப்போது பாகுபலிக்கு செக் வைக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. நேரடியாக காரணத்தைச் சொல்லாமல் பிரமேம் பட திருட்டு டிவிடி விஷயத்தை முன்வைத்து ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள். இதனால் பாகுபலி 50 மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆனால், ரசிகர்களிடையே படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இந்தத் தடையை விரைவில் விலக்கிக்கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. மேலும் 100 திரையரங்குகளில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.