மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகுபலி: முதல் நாளிலேயே சாதனை வசூல்!

அடுத்த இரு நாள்களும் விடுமுறை தினங்கள் என்பதால் இதே வசூல் நீடிக்கும் என்று...

News image
Updated On :11 ஜூலை 2015, 9:23 am

உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியான பாகுபலி படம் வெளியான முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாயை அள்ளியுள்ளது.

நேற்று வெளியான பாகுபலி படம் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் எங்குத் திரும்பினாலும் பாகுபலி விமரிசனங்கள்தான். தமிழ்நாட்டில் மட்டும் 379 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் தெலுங்கு பாகுபலிக்கு மட்டும் 46 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.

வெளியான முதல்நாளே மிரட்டும் வசூலைப் பெற்றுள்ளது, 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி. அமெரிக்காவில் வியாழக்கிழமை இதன் பிரிவியூ காட்சிகள் நடைபெற்றன. இதில் மட்டும் 8 கோடி ரூபாய் (1.29 மில்லியன் டாலர்) வசூலைப் பெற்றுள்ளது.

உலகம் முழுக்க வெளியான 4000 திரையரங்குகள் மூலம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான  வசூலை அள்ளியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. அடுத்த இரு நாள்களும் விடுமுறை தினங்கள் என்பதால் இதே வசூல் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் முதல் மூன்று நாள்களிலேயே குறைந்தது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுவிடும் என்று கணிக்கப்படுகிறது. 

இந்திய சினிமாவில் பாகுபலியின் வசூல், பல சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.