பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்கிறார் என்று செய்தி வந்ததிலிருந்து அஜீத் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். இப்போது இது குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பதிலளித்துள்ளார்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2 படத்துக்கான திரைக்கதையைத் தயார் செய்துவிட்டதாகவும் கதை கேட்ட அஜீத் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் பலவிதமான கோணங்களில் செய்திகள் வெளிவந்தன. ரஜினி அந்தக் கதையில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாலேயே அஜீத் நடிக்கிறார் என்பது போன்ற பாட்ஷா 2 பற்றிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
பாட்ஷா 2 பற்றிய செய்தியில் உண்மையில்லை. ஆனால் அந்தச் செய்தி உண்மையானால் சந்தோஷம்தான். அஜீத்தை வைத்து இயக்க யார் மறுப்பு தெரிவிப்பார்கள் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அஜீத் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதற்கடுத்து கே.வி. ஆனந்த் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதையும் இரு தரப்பினரும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

வேலியில் சிக்கி உயிரிழந்த மான்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


