மனத்தளவில் தமிழ்ப் பெண்ணாக உள்ளேன்: ஏமி ஜாக்சன்

நான் இந்த நாட்டை உடனே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது உலகில் வேறு எந்த இடத்தை விடவும் சென்னையில் அதிக நேரம்...
மனத்தளவில் தமிழ்ப் பெண்ணாக உள்ளேன்: ஏமி ஜாக்சன்
Updated on
1 min read

முதல் வருடம் சென்னைக்கு வந்தபோது வேற்றுகிரகவாசி போல உணர்ந்தேன். ஆனால் இப்போது மனத்தளவில் தமிழ்ப் பெண்ணாக உணர்க்கிறேன் என்கிறார் நடிகை ஏமி ஜாக்சன்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

மதராசப்பட்டினம் 2010-ல் வெளியானது. அடுத்த 2 வருடங்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை. மீண்டும் லண்டனுக்குத் திரும்பிவிட்டேன். அந்தப் படம் ஓர் அதிர்ஷ்டம் என நினைத்தேன். அப்போது என் வயது 17. அதன்பிறகு எனக்குப் பெரிய படங்கள் கிடைக்க ஆரம்பித்தது பெரிய திருப்பம்.

மேனரிஸம்களால் என்னை ஒரு தமிழ்ப் பெண்ணாக திரையில் காண்பிக்கிறேன். மேக்-அப் மற்றும் இதர விஷயங்களை அதற்கேற்ற குழு பார்த்துக்கொள்ளும். ஐ படத்தில் நான் தமிழ்ப் பெண்ணாக நடித்தாலும் நவநாகரிகப் பெண்ணாக நடித்தேன். ஆனால் தனுஷ் மற்றும் உதய்நிதி படத்தில் நான் சல்வார் கமீஸ் அணிந்து நடிக்கிறேன். மேக்-அப், ஹேர்ஸ்டைல் கிடையாது. தனுஷ் படத்தில் வசனங்கள் எனக்கு காட்சி படமாக்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் தரப்படுகின்றன. அப்போதுதான் என்னால் இயல்பாக வசனம் சொல்லி நடிக்கமுடியும் என தனுஷ் எண்ணுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒன்று நீங்கள் அதன் கலாசாரத்தைக் காதலிப்பீர்கள் அல்லது பிடிக்காமல் போகும். நான் இந்த நாட்டை உடனே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது உலகில் வேறு எந்த இடத்தை விடவும் சென்னையில் அதிக நேரம் செலவழிக்கிறேன். முதல் வருடம் இங்கு வந்தபோது வேற்றுகிரகவாசி போல உணர்ந்தேன். ஆனால் இப்போது மனத்தளவில் தமிழ்ப் பெண்ணாக உணர்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com