ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புலி கதை: மகன் ஓகே செய்த பிறகு நடித்த விஜய்!

இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமை அடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை...

News image
Updated On :29 ஜூன் 2015, 10:00 am

புலி கதையை நடிகர் விஜய் ஒப்புக்கொண்டது குறித்து சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது அது விஜய்க்கு சரியாகப் படவில்லை. வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்ததால் உடனே ஓகே சொல்லவில்லை.

விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப்போனது. அப்பா இது  நீங்கள் பண்ணவேண்டிய படம். கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.

மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லியது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாற வைத்து சிம்புதேவனுக்கு சம்மதம் சொல்ல வைத்துள்ளது.

புலி படத்தில் விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.