
ஆந்திரத்தில் கரோனாவின் தொற்று குறைந்து வருவதால் ஜூலை 31 முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன.
கரோனா இரண்டாம் அலையில் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தநிலையில் 50 சதவீத பார்வையார்களுடன் திரையரங்கு செயல்படலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
ஜூலை 31 முதல் திறக்கப்படும் திரையரங்குகளில் இணையதளம் மூலம் டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து, இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி உள்ளது.
மேலும் தெலங்கானா மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகிறது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.