25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் !

மலையாள மொழிப் படங்கள் அதிகமாகக் கொண்டாடப்படும் வேளையில்  25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறார் பிரபல தமிழ் நடிகர் அர்விந்த் சாமி.
25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் !
Updated on
1 min read

மலையாள மொழிப் படங்கள் அதிகமாகக் கொண்டாடப்படும் வேளையில்  25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்க இருக்கிறார் பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் சாமி.

1992-ல் 'டாடி’ என்கிற படத்தில் அறிமுகமாகி பின்  1996 ஆம் ஆண்டு ’தேவராகம்’ படத்துடன் மலையாளத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அரவிந்த சாமி தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

’ஒட்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டி.பி.பெல்லினி இயக்க நடிகர் ஆர்யா தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சமீப காலமாக அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com