நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்வ வரவேற்பை பெற்றுள்ளது. படம் வருகிற செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு ஒளிபரப்பப்படாது என்று படக்குழு அறிவித்த நிலையில், தற்போது படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான திரையரங்குகளில் காலை 8 மணிக்கு முதல் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.
4 மணி காட்சி ரத்து குறித்து தயாரிப்பாளர் தாணு, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
தனுஷ் நடிப்பில் தான் தயாரித்த அசுரன், கர்ணன் உள்ளிட்ட படங்கள் காலை 8 மணிக்குதான் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன் கருதி நானே வருவேன் படத்தின் 4 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படத்தின் 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

