‘நிரபராதியென நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை’-விருதுபெற்ற மலையாள இயக்குநர்

தான் குற்றமற்றவன் என நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை என விருதுபெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார். 
‘நிரபராதியென நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை’-விருதுபெற்ற மலையாள இயக்குநர்
Published on
Updated on
2 min read

தான் குற்றமற்றவன் என நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை என விருதுபெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார். 

45 வயதான மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் 2014இல் தனது முதல் படத்தினை மக்களிடமிருந்து பணம் வசூலித்து இயக்கினார். 2015இல் ‘ஒழிவுதிவசத்தே களி’ எனும் படத்தினை எடுத்தார். இப்படத்தில் இரண்டாம் பகுதி முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்து அசத்தியிருந்தார். இநதப் படம் கேரள அரசின் விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இவரது படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. கலை ரீதியாக இவரது படங்கள் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இவர் 2020இல் ‘கயாட்டம்’ எனும் படத்தினை இயக்கினார். இதில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.  இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியாரிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக புகார் எழுந்தது. பின்பு அவரை காவல்துறை கைது செய்ததும் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது. 

இந்த குற்றச்சாட்டுகள் எதுவுமே உண்மையானதில்லை என இயக்குநர் சனல்குமார் சசிதரன் ஆரம்பம் முதலே வாதிட்டு வருகிறார். இந்நிலையில் டோவினோ தாமஸ் நடித்த அவரது புதிய படம் ‘வழக்கு’ சவுத் சியோல் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 

நமது ‘வழக்கு’ திரப்படம் சவுத் சியோல் திரப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படுள்ளது மகிழ்ச்சி தருகிறது. முதல் கோவிட்டுக்கு முன்பு இந்த திரைப்படத்தினை எடுத்தோம். 2021இல் படம் முடிவடைந்தாலும் பல்வேறு பிரச்சனைகளால் படம் வெளியாகவில்லை. 

என மீதுள்ள குற்றத்தை போக்கி நான் நிரபராதியென நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை. நான் உண்மையை நம்புகிறேன். நான் தனிப்பட்ட வாழ்வில் குற்றமே செய்ததில்லை என சொல்லமாட்டேன். ஆனால் நான கலை ரீதியாக தூய்மையாமையானவன். எனக்கு வாழ்வில் ஒரே குறிக்கோள்தான். சினிமா இயக்குவது. சினிமா என்பது ஆன்மீகப் பயணம் போன்றது எனக்கு.  ஆனால் இந்த புகாருடன் இதைத் தொடர விரும்பவில்லை. இந்த முடிவு கடினமானதாக இருந்தாலும் மாறப்போவதில்லை. இந்தப் பொய்யான வழக்கு என்னை முகத்தில் அறைந்திருக்கிறது. குறுகிய எண்ணத்துடன் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அளித்த கட்டுக்கதைதான் இந்த வழக்கு. 

இதுவரை 7 படங்கள், ஒரு ஆவணப்படம், 3 குறுப்படம் எழுதியிருக்கிறேன். இனிமேல் படமே எடுக்கமுடியாமல் இறந்தாலும் கவலையில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். அதவரை படங்களை இயக்கமாட்டேன். இதுவரை என்னுடைய படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எல்லோரையும் நேசிக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com