தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வணங்கான் படப்படிப்பை நிறைவு செய்த அருண் விஜய்!

வணங்கான் திரைப்படத்தின் தனக்கான படப்பிடிப்பை அருண் விஜய் நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 அக்டோபர் 2023, 9:58 am

DIN

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். இந்த படத்தில் நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

படத்தை  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. தற்போது, இது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

சமீபத்தில் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடனும் இருந்ததால். ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “பாலா அண்ணனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கன்னியாகுமரியை மையமாக வைத்து உருவாகிவருகிறது. வணங்கான் கண்டிப்பாக பேசப்படும். இது அவருக்கு நல்ல இடத்தைத் தரும். அருண் விஜய்க்கும் சரியான படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தற்போது, இப்படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளை அருண் விஜய் நடித்து முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.