பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை யூடியூபில் வெளியிட்ட எதிர்நீச்சல் நாயகி!

பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை யூடியூபில் வெளியிட்ட எதிர்நீச்சல் நாயகி!

கேக் வெட்டியது, கடலில் குளிப்பது, உணவு வகைகள், நண்பர்களுடன் பாட்டு பாடி நடனமாடி கொண்டாடியுள்ளார்.
Published on

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மதுமிதா, தனது பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்குச் சென்றிருந்தார். அங்கு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விடியோவை தனது யூடியூபில் மதுமிதா வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஜனனி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சபரி நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் தொடரில் நடிகை மதுமிதா
எதிர்நீச்சல் தொடரில் நடிகை மதுமிதா
பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை யூடியூபில் வெளியிட்ட எதிர்நீச்சல் நாயகி!
சிங்கப் பெண்ணுக்கு 24 வயது! பிறந்தநாள் கொண்டாடும் சீரியல் நடிகை!

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நடிகை மதுமிதா, தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் பாலி தீவுக்குச் சென்றார். அங்கு தனது விடுமுறை நாள்களை மகிழ்ச்சியுடன் களித்தார்.

இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அவ்வபோது பதிவிட்டு வந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

பாலி தீவில் நடிகை மதுமிதா
பாலி தீவில் நடிகை மதுமிதாdinamani
பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை யூடியூபில் வெளியிட்ட எதிர்நீச்சல் நாயகி!
சினிமா தயாரிப்பாளரை கரம்பிடித்த சீரியல் நடிகை!

மேலும் சொந்தமாக சேனல் வைத்து அதில், விடியோக்களையும் பதிவிட்டு வருவது அவர் வழக்கம். அந்தவகையில் பாலி தீவில் பிறந்தநாள் கொண்டாடிய விடியோவை பதிவிட்டுள்ளார்.

நண்பர்களுடன் ஆடல் பாடலில் மதுமிதா
நண்பர்களுடன் ஆடல் பாடலில் மதுமிதாdinamani

நள்ளிரவிக் கேக் வெட்டியது, கடலில் குளிப்பது, உணவு வகைகள், நண்பர்களுடன் பாட்டு பாடி நடனமாடுவது என விடியோ முழுவதும் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

dinamani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com