தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சிங்கப் பெண்ணுக்கு 24 வயது! பிறந்தநாள் கொண்டாடும் சீரியல் நடிகை!

சிங்கப் பெண்ணே தொடரில் நடித்துவரும் நடிகை மணீஷா மகேஷ் இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 4:39 pm IST

சிங்கப் பெண்ணே தொடரில் நடித்துவரும் நடிகை மணீஷா மகேஷ் இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஆனந்தி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார்.

Story image

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், தனது குடும்ப பொருளாதாரத் தேவைகளுக்காக நகரத்துக்கு வேலைத்தேடி வந்து சந்திக்கும் இன்னல்களே சிங்கப் பெண்ணே தொடரின் கதைக்களமாகும்.

இந்தத் தொடரில் நடித்துவரும் மணீஷா மகேஷின் நடிப்பு பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் பிறந்த இவர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத் தொடரில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். 2020-ல் பாடாத பெண்கிளி என்ற மலையாளத் தொடரில் நடித்தார்.

Story image

அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார்.

சிங்கப் பெண்ணே தொடர் எதிர்நீச்சல், கயல் போன்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

சிங்கப் பெண்ணே தொடரில் மணீஷா மகேஷின் காட்சிகள் அடிக்கடி சமூகவலைதளங்களில் பகிரப்படும். சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாய இயங்கக்கூடிய மணீஷா, இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.