புரமோஷனில் நஸ்ரியாவின் ஆடை கவர்ச்சியாக இருப்பதாக விமர்சனங்கள்..! இன்ஸ்டாவில் பதில்!
நடிகை நஸ்ரியா தனது புதிய உடை குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறியிருப்பதாவது...

நடிகை நஸ்ரியா - படங்கள்: இன்ஸ்டா / நஸ்ரியா
நடிகை நஸ்ரியா துபை புரமோஷனில் அணிந்து வந்த ஆடைக்கு இணையவாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைந்து வந்தார்கள்.
இந்தக் கேலிக்கும் விமர்சனங்களும் பதில் அளிக்கும் விதமாக நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் சூசகமாக விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிப்பதாக நஸ்ரியா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
நேற்று துபையில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நஸ்ரியா மஞ்சள் ஆடையை அணிந்திருந்தார். அது எக்ஸ் பக்கத்தில் இணையவாசிகள் பலரிடையே, “ஏன் திடீரென இவ்வளவு கவர்ச்சி, ஆபாசம்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நயà¯à®¯à®¾à®£à¯à®à®¿ பà®à®¤à¯à®¤à¯à®² நஸà¯à®°à®¿à®¯à®¾ à®à®à¯à®ªà¯à®ªà¯à®² தனà¯à®·à¯ à®à¯ வà¯à®à¯à®à®¿à®± மாதிரி à®à®°à¯ à®à¯à®©à¯. நஸà¯à®°à®¿à®¯à®¾ à®à®¤à¯à®¤à¯à®à¯à®à®², à®à®µà®©à¯à®à¯à®à®³à¯à®®à¯ à®à®°à®¿à®©à¯ விà®à®¾à®® வà¯à®± à®à®°à¯ பà¯à®³à¯à®³à®¯ நிà®à¯à® வà¯à®à¯à®à¯ à®à®à¯à®ªà¯à®ª பà¯à®à®¿à®à¯à®à¯ à®à®¤ நஸà¯à®°à®¿à®¯à®¾ மாதிரி à®à®¾à®à¯à®à¯à®©à®¾à®à¯à®. à®à®¤à¯à®à¯à®à¯ à®à¯à®¸à¯ பà¯à®à¯à® நஸà¯à®°à®¿à®¯à®¾ à®à®ªà¯à®ª à®à®ªà¯à®à®¿ à®à®°à¯ à®à®¾à®¸à¯à®à¯à®¯à¯à®®à¯à®²ð..#nazriya #nazriyanazim #actress pic.twitter.com/YtqxfoWds9
— Ketta paiyan sir intha Kumaru (@kumaru_007) October 26, 2026
இந்தப் புகைப்படங்களை நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். பின்னர், ஸ்டோரியில் ”உங்கள் கற்பனைகள் நனவாகட்டும், சிக்கல்கள் விலகிச் செல்லட்டும்; அதன் பிறகு நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்!” எனக் கூறியுள்ளார்.
ஜென்ஸிக்களின் பாணியில் டெலுலு, பைலு, சில்லுலு என அந்த வரிகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக இதனை வைத்துள்ளார் என அவரது ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
நஸ்ரியா பகிர்ந்த ஸ்டோரி - படம்: எக்ஸ் / நஸ்ரியா
Summary
Nazriya Nazim hits back at trolls after criticism over her 'Scene' Dubai event outfit; shares cryptic Instagram story
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


