இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளின் மறுமண விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித்தைத் (29) திருமணம் செய்தார். ஆனால், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஹித் போக்சோ வழக்கில் கைதானார். தொடர்ந்து, அவரை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, ஷங்கர் வீட்டில் வசித்து வந்தார்.

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
கங்குவா பட போஸ்டர் சொல்லும் ரகசியம் - ரசிகர்களுக்குப் புரிந்ததா?

இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்தம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜூன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com