கங்குவா பட போஸ்டர் சொல்லும் ரகசியம் - ரசிகர்களுக்குப் புரிந்ததா?

கங்குவா பட போஸ்டர் சொல்லும் ரகசியம் - ரசிகர்களுக்குப் புரிந்ததா?

கங்குவா பட போஸ்டர் சொல்லும் ரகசியம் - ரசிகர்களுக்குப் புரிந்ததா?
Published on

'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் போஸ்டர், புத்தாண்டு வாழ்த்துடன் நேற்று வெளியாகியிருந்தது. இதனை நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புதிய போஸ்டரில், கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார் என்றே கூறப்படுகிறது. பல ரசிகர்கள் அதனை புரிந்துகொள்ளும் வகையில் ஃபையர் எமோஜிகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

இந்த போஸ்டரில், சூர்யா இரண்டு அவதாரங்களை எடுத்துள்ளார். ஒன்றில், சாதாரண மனிதரைப் போலவும், மற்றொன்றில் போர் வீரரைப் போலவும் உள்ளார். எனவே, சூர்யா இப்படத்தில் இரட்டைவேடமேற்கு நடித்திருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துகொண்டுள்ளனர்.

இந்த ஆண்டே கங்குவா வெளியாகும் என்பதைத்தான் போஸ்டர் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் வெளியானால், சூர்யா ரசிகர்களுக்கு நிச்சயம் கங்குவா படம் ஒரு கோடை விருந்தாக அமைகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று அண்மையில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தேதியை தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க தீவிரம் காட்டிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com