அம்பானி மருமகள் ராதிகாவுடன் ஜான்வி கபூர்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரவில் ராதிகா மெர்ச்சென்ட் உடன் இருந்த புகைப்படங்களை நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.
அம்பானி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரவில் ஜான்வி கபூர்
அம்பானி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரவில் ஜான்வி கபூர்
Published on
Updated on
1 min read

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரவில் ராதிகா மெர்ச்சென்ட் உடன் இருந்த புகைப்படங்களை நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.

அதில், ஜான்வி கபூருடன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷோல்கா அம்பானி, அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரின் உறவினர்கள் உள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் இரவில் அனைவரும் இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்துகொண்டு மணமகள் ராதிகாவுடன் இரவுப் பொழுதை கழித்துள்ளனர். இரவு முழுக்க பாடல்களுக்கு நடனமாடுவது, கேளிக்கை விளையாட்டுகளில் பங்கேற்பது போன்று அப்படங்கள் உள்ளன.

மணமகன் ஆனந்த் அம்பானியும் தனது நண்பர்களுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர்களின் புகைப்படங்களையும் ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சென்ட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 3 நாள்களுக்கு நடைபெற்றது. இவர்களுக்கு ஜுலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com