ஆவேஷம் வசூல் வேட்டை!

மஞ்ஞுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு ஆகிய மலையாள படங்களை தொடர்ந்து, ஆவேஷமும் வசூல் வேட்டை.
ஆவேஷம் வசூல் வேட்டை!

ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம் திரைப்படத்தின் முதல் 5 நாள்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோமன்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

பெங்களூரு ரெளடியாக ஃபகத் ஃபாசில் அசத்தியுள்ள இப்படத்தில், மிதுன் ஜெய்சங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் ஆகியோர் புதுமுகங்களாக நடித்துள்ளனர்.

இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவனின் ரோமன்சம் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக ஆவேஷமும் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆவேஷம் வசூல் வேட்டை!
ஃபகத் ஃபாசிலின் விருந்து: ஆவேஷம் - திரை விமர்சனம்!

இந்த ஆண்டு வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு ஆகிய மலையாள படங்களை தொடர்ந்து, ஆவேஷமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com