அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஹிந்தி ரசிகர்கள் கொடுத்த அன்பு...: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகவுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2024, 7:24 am

DIN

நடிகர் விஜய்சேதுபதி, பாலிவுட் திரையுலகத்திற்கு சென்றபோது சில படங்களோடு தனது வாய்ப்பு அங்கு முடிந்துவிடும் என நினைத்ததாகவும் ஹிந்தி ரசிகர்கள் தன்னை வரவேற்றதை தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் பேசும் ஹிந்தி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் எனக் கருதியதாகவும் ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக நடந்ததாகவும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் ஜன.12 தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ளது.

Story image

‘பீட்சா’. ‘96’, ‘விக்ரம் வேதா’ மற்றும்  ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும் பார்ஸி மற்றும் ஷாரூக் கானின் ‘ஜவான்’ அவரை இன்னும் அதிகமான பாலிவுட் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

‘ஏக் ஹசீனா தி’, ‘பத்லாபூர்’ மற்றும் ‘அந்தாதுன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் உடன் பணிபுரிவது தனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாக இருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

பார்ஸி, ஜவான் கொடுத்த நம்பிக்கை இன்னும் அதிகமான இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தன்னை யோசித்து கதை எழுதுவதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.