பேட்மேன், டாப்கன் திரைப்பட புகழ் வால் கில்மர் காலமானார்!

பேட்மேன், டாப்கன் திரைப்பட நடிகர் வால் கில்மர் காலமானார்!
வால் கில்மர்..
வால் கில்மர்..
Published on
Updated on
1 min read

பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்துவந்த வால் கில்மர் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததை அவரது மகள் மெர்ஸிடிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு வெளியான டாப் சீக்ரெட் என்ற படத்தின் மூலம் அறிமுகமான வால் கில்மர், 1986 ஆம் ஆண்டு டாம்க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப்கன் திரைப்படத்தில் நடித்ததால் அவரது வேடம் திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படிக்க: ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!

1990-களில் ஹாலிவுட் உலகில் கில்மர் கொடிகட்டி பறந்தார். 1995 ஆம் ஆண்டு வெளியான "பேட்மேன் ஃபாரெவர்" போன்ற சூப்பர் ஹீரோ படங்களிலும் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

1993 ஆம் ஆண்டு வெளியான டோம்ப்ஸ்டோன் திரைப்படத்தில் டாக் ஹாலிடேவாகவும், 1991 ஆம் ஆண்டு வெளியான தி டோர்ஸ் திரைப்படத்திலும், 1995 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் தலைசிறந்த படைப்பான ஹீட் என்னும் திரைப்படத்தில் வங்கிக் கொள்ளையனாகவும் நடித்து அசத்தியிருந்தார் கில்மர். 80-க்கும் மேற்பட்ட படங்களிள் நடித்துள்ள கில்மர், வால் என்ற அவரது ஆவணப் படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோன் வேலியை திருமணம் செய்து விவாகரத்து செய்த கில்மருக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதையும் படிக்க: செய்யாத குற்றத்தை ஏற்பதா? கொரிய நடிகர் கண்ணீர் மல்க பேட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com