செய்யாத குற்றத்தை ஏற்பதா? கொரிய நடிகர் கண்ணீர் மல்க பேட்டி!

முன்னாள் காதலி தற்கொலை பிரச்னையினால் தென் கொரிய நடிகர் அழுதுகொண்டே அளித்த பேட்டி...
கண்ணீர் வடித்த நடிகர் கிம் சூ-கியுன்
கண்ணீர் வடித்த நடிகர் கிம் சூ-கியுன் படம்: ஏபி
Published on
Updated on
2 min read

பிரபல தென் கொரிய நடிகர் கிம் சூ-கியுன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தனது முன்னாள் காதலிடனான தவறான உறவு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

கே டிராமா எனப்படும் கொரிய மொழிப் படங்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பெண்கள் விருப்பத்துடன் பார்க்கிறார்கள்.

அதில் ‘இட்ஸ் ஓகே டூ நாட் பீ ஓகே’, ‘மை லவ் பிரம் த ஸ்டார்’, ‘குயின் ஆஃப் டியர்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிம் சூ-கியுன்.

இவரும் நடிகை கிம் சே-ரானும் காதலித்து வந்தார்கள். கடந்த பிப்ரவரியில் நடிகை கிம் சே-ரான் தனது 24 வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

என்ன பிரச்னை?

கிம் சே-ரான் மைனராக இருக்கும்போதே நடிகர் கிம் சூ-கியுன் காதலித்ததாகவும் நடிகரின் ஏஜென்சி நடிகையிடம் கடனை கேட்டு மிரட்டியுள்ளதாகவும் நடிகை இறந்த ஒரு மாதத்துக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றில் காணொலி வெளியானது.

நடிகை 15 வயதிலிருக்கும் போதிலிருந்து நடிகர் காதலித்ததாக கொரியாவின் உள்ளூர் சேனல்களில் செய்து ஒளிபரப்பாகி சர்ச்சை கிளம்பியது.

மைனாராக இருக்கும்போதே நடிகையை காதலித்து வந்ததாகவும் நடிகையாக தகுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நடிகர் இதனை மறுத்து மேஜர் ஆன பின்னரே 2019-2020ஆம் ஆண்டு மட்டுமே காதலித்தேன் எனக் கூறியுள்ளார்.

2022இல் நடிகை குடித்துவிட்டு ஏற்படுத்திய விபத்துக்கும் நடிகர்தான் காரணம் என குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினர் 16 வயதில் நடிகருடனான உரையாடலை பொதுவெளியில் காண்பித்தனர்.

செய்யாத குற்றத்துக்கு பொறுப்பேற்பதா?

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கிம் சூ-கியுன் அழுதுகொண்டே பேசியதாவது:

நான் செய்தவற்றுக்கு பொறுப்பேற்று விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நான் செய்யாததுக்கு பொறுப்பேற்க முடியாது.

இன்னும் என்னை நம்பும் மக்களுக்காக நான் இதைச் சொல்கிறேன். நான் முதன்மை நடிகராக இருப்பதால் பலரையும் காப்பாற்ற வேண்டியுள்ளது.

ஓராண்டு உறவில் என்ன நடந்திருக்கும்? நற்பயன் விளையும் என்று தயாரிப்பு நிறுவனம் இரவு முழுவதும் வேலை செய்து என்ன பயன் கிடைத்தது?

வீண் பழி சுமத்துகிறார்கள்

2022இல் நடிகை வேறு யாருடனோ காதலித்து வந்ததாக நினைக்கிறேன். அப்போது நான் அவருடன் கவனமாகவே பேசினேன். அவரது குடும்பத்தினர் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.

நான் முன்னாள் காதலன் என்பதாலேயே அவரது இறப்புக்கு என்னைக் காரணமாக்கப் பார்க்கிறார்கள்.

போலியான ஆதாரங்களை எனக்கெதிராக அவரது குடும்பத்தினர் முன்வைக்கிறார்கள் என்றார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்பு இழப்பு, 8.1 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு

இந்த சர்ச்சையினால் நடிகரது பெயருக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பட வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகருடனான ஒப்பந்தத்தை கொரிய காஸ்மடிக் நிறுவனம் முறித்துக்கொண்டுள்ளது. மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அவரது புதிய படத்தை நிறுத்தி வைத்துள்ளது.

நடிகரின் ஆலோசகர்கள் சட்ட ரீதியாக இதை அணுகி வருகிறார்கள்.

குறிப்பிட்ட அந்த யூடியூப் சேனல் மீதும் நடிகையின் குடும்பத்தினர் மீதும் மானநஷ்ட வழக்குப் பதிந்து இருக்கிறார்கள். அதில் நடிகருக்கு 8.1 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com