

திரைப்பட இயக்குநர் வி. சேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (நவ.14) மாலை காலமானார்.
திரைப்பட இயக்குநர் வி. சேகர், இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாள்களாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
1990 ஆம் ஆண்டு ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வி. சேகர், 1980-90 காலகட்டங்களில் குடும்பத்தினரிடைடே நிகழும் சண்டை, சச்சரவுகள், காதல் மற்றும் அதிலுள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவைகளைப் பிரதிபலிக்கும் விதமாக படங்களை இயக்குவதில் வல்லவர்.
கவர்ச்சியான பாடல்கள், நடிகைகள் ஏதுமின்றி குடும்ப பாங்கான படங்களால் ரசிகர்களைக் கவர்ந்த வி. சேகர், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல், வரவு எட்டணா செலவு பத்தணா உள்ளிட்ட 18 படங்களை இயக்கியுள்ளார்.
இவர், அந்தக் காலகட்டத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலு - விவேக் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்த பல திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றன.
இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.