22 ஆண்டுகள்! நயன்தாரா நெகிழ்ச்சி!

நடிகை நயன்தாரா திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் பற்றி...
நயன்தாரா
நயன்தாரா
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

மாடலிங்கில் அசத்திவந்த நயன்தாரா முன்னணி மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில், கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

22 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா வெளியிட்டுள்ள பதிவில், “கேமராவுக்கு முன் வந்து நின்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று எனக்குத் தெரியாது.

ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும் என்னை வடிவமைத்து, என்னை குணப்படுத்தி, நான் யார் என்பதை உருவாக்கியிருக்கிறது. என்றென்றும் நன்றியுடன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு, ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ‘கஜினி’, எஸ்.டி.ஆரோடு ‘வல்லவன்’, விஜய்யுடன் ‘வில்லு’, அஜித்துடன் ‘பில்லா’, ‘விஸ்வாசம்’, விஷாலுடன் ‘சத்யம்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன்தாரா, தற்போது கவினின் ‘ஹாய்’ உள்ளிட்ட வளர்ந்துவரும் நடிகர்களில் படங்களிலும் நடித்து வருகிறார்.

நாயகியை மையப்படுத்தி வெளியான 'மாயா', 'டோரா', 'அறம்' மற்றும் 'ஐரா' போன்ற படங்களில் நடித்து நயன்தாரா அசத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் நடித்த பின்னர் அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை மணந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் சேர்ந்து தற்போது ரௌடி பிக்சர்ஸில் படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஷாருக் கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார். தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியட்’ ஆகிய மலையாள படங்கள் கவினுக்கு ஜோடியாக நடிக்கும் 'ஹாய்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா
பைசன் காளமாடன்: புதிய பாடல் வெளியீடு!
Summary

Nayanthara pens note of gratitude on completing 22 years in cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com