நடிகர் துருவ் விக்ரம் கதாநாயாகனாக நடித்துள்ள “பைசன் காளமாடன்” திரைப்படத்தின் “காளமாடன் கானம்” எனும் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் எனும் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், உருவாகியுள்ள இப்படத்தின் 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் எழுதியுள்ள இப்படத்தின் "காளமாடன் கானம்" எனும் 5 ஆவது பாடல், இன்று (அக். 9) வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள் மற்றும் அனுராக் அரோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.