
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கூகுள் க்ளௌட்(Google Cloud) உடன் இணைந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்(செய்யறிவு) தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்கவிருக்கிறார்.
இந்தத் திட்டத்துக்கு ‘சீக்ரெட் மவுண்டேன்(Secret Mountain)’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதைச் சொல்லும் பாணியிலான இசை ஆல்பத்தை உருவாக்குவதில் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் க்ளௌட் வழங்கும் ஏஐ தொழில்நுட்பமான வியோ 3, இமேஜென், ஜெமினி ஃப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இசைக் கலைஞர்களும் ஏஐ தொழில்நுட்பமும் ஒருங்கே இணைந்து பணியாற்றும்போது பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.