
இசையமைப்பாளர் இளையராஜா விரைவில் புதிய சிம்பொனியை எழுதத் தொடங்கவுள்ளார். இந்தத் தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, அதில், புதிதாக சிம்பொனியை எழுதத் தொடங்கவுள்ளதாகக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம், இசைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்தமைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா பிரமண்டமாக நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் சிம்பொனி குறித்து உருக்கமாகப் பேசிய இளையராஜா ``வாழ்க்கையில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது. இதுபோல நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனைப் பாடல்களை இசையமைத்திருக்க முடியாது. சிம்பொனி உருவாக தனது குழந்தைகள்தான் காரணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருந்தது” நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இசைத்துறையில் அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் 2-ஆவது சிம்பொனியா இது அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.