நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துரந்தர் 2 படத்தின் தமிழ் மொழிக் காட்சிகள் ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!!

துரந்தர் 2 படத்துக்கான தமிழ் உள்பட பல மொழிகளில் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

News image

துரந்தரில் ரன்வீர் சிங்.

Updated On :20 மார்ச் 2026, 5:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

துரந்தர்: தி ரிவென்ஞ்ச் படத்துக்கான தமிழ் உள்பட பல மொழிகளில் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் நேற்று (மார்ச் 19) வெளியானது.

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Story image

இந்தப் படத்துக்கான சிறப்புக் காட்சிகள் நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டன. இருப்பினும் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் துரந்தர் படம் வெளியானது. சிறப்புக் காட்சி மட்டும் ரூ. 43 கோடி வரை வசூலித்த நிலையில், முதல் நாளில் சுமார் ரூ. 100 கோடி வரை வசூலீட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் தமிழில் படம் வெளியாக நிலையில், ஹிந்தி மொழிக் காட்சிகள் மட்டும் ரூ. 3 - 4 கோடி வரை வசூலித்துள்ளன.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி காட்சிகள் இன்றும் (மார்ச் 20) ரத்து செய்யப்பட்டன. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பிவிஆர் சினிமாஸில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் மீண்டும் வங்கியில் செலுத்தப்படும் என்றும் வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.