குடியரசுத் தலைவர் மாளிகையில் திரையிடப்படும் ரன்பீர் கபூர், யஷ் நடித்த ‘ராமாயணா’!
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரன்பீர் கபூர், யஷ் நடித்த ‘ராமாயணா’ படம் திரையிடப்படவுள்ளதைப் பற்றி...
ராமாயணா போஸ்டர்
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரன்பீர் கபூர், யஷ் நடித்த ‘ராமாயணா’ படம் திரையிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கல், சிச்சோர் படங்களுக்குப் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் ‘ராமாயணா’ படம் அதிகப் பொருள் செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தின் முதல் பாகம், பிரமாண்டமான காட்சிகளுடனும் பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக்ஸ்களுடன் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ராமன் மற்றும் ராவணனின் கம்பீரமான தோற்றம், விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது. மேலும், இந்திரனின் வெள்ளை யானை, புஷ்பக விமானம் போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரஹ்மானுடன் இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லர் புகழ் - கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட 'ராமாயணா' தீபாவளியையொட்டி நவ. 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு அக். 20 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் அரசியல் தலைவர்களுக்காக ‘ராமாயணா’ திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்துக்கான சிறப்பு திரையிடலுக்கான அனுமதிகளைப் பெற படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
இந்தப் படத்திற்கு மும்பையில் நீடா அம்பானி கலாசார மையம் மற்றும் தில்லி என இரண்டு இடங்களில் பிரீமியர் காட்சிகளை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Summary
With Nitesh Tiwari’s Ramayana: Part 1 gearing up for its worldwide theatrical debut, the film could have a special audience at one of the country’s most prominent official residences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

