ராமாயணா பட வெற்றி... தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் ரன்பீர் கபூர்!
நடிகர் ரன்பீர் கபூர் தில்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவிற்குச் சென்றது குறித்து...

பங்களா சாகிப் குருத்வாராவில் ரன்பீர் கபூர்... - படங்கள்: இன்ஸ்டா / புபிந்தர் சிங் புல்லர்
தில்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவிற்கு நடிகர் ரன்பீர் கபூர் ராமாயணா திரைப்பத்தின் வெற்றிக்காக படக்குழுவுடன் சென்று ஆசிர்வாதம் பெற்றார்.
நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா முதல் பாகம் கடந்த நவ.5ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், டிஎன்இஜி இணைந்து தயாரித்தது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் நடிகர் யஷ் ராவணனாகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் சுமார் ரூ.1,700 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் சிறப்பான கிராஃபிக்ஸ் காட்சிகளால் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தில்லியில் இருக்கும் பங்களா சாகிப் குருத்வாராவிற்கு நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் நிதீஷ் திவாரி, தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா சென்று வந்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
தில்லி சீக்கிய குருத்வாராவின் நிர்வாகக் குழு உறுப்பினர் புபிந்தர் சிங் புல்லர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆரஞ்சு நிற தலைப்பாகையுடன் நீல நிற குர்தாவுடன் அவர் சென்று வந்துள்ளார்.
முன்னதாக, அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகும் ரன்பீர் கபூர் இங்கு வந்திருந்தது நினைவுகூரத்தக்கது. ராமாயணா இரண்டாம் பாகம் 2027 இறுதி அல்லது 2028 தொடக்கத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Ranbir Kapoor visits Delhi's Gurdwara Bangla Sahib with 'Ramayana' director, producer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


