தலைசிறந்த ஆல்ரவுண்டர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த வியான் முல்டர்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் வீரராக வியான் முல்டர் நிகழ்த்திய சாதனை குறித்து...

Wiaan Mulder sets a world record

உலக சாதனை படைத்த வியான் முல்டர் - படங்கள்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்

Updated On :

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக பேட்டிங்கில் முச்சதமும் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளும் எடுத்து வீரராக வியான் முல்டர் உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வியான் முல்டர் (28 வயது) வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். அத்துடன் தென்னாப்பிரிக்கா 2-0 என தொடரை முழுமையாக வென்றது.

முன்னதாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2025ல் 367 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தார். லாரா மீதான அதிக பற்றினால் 400 ரன்களைக் கடக்காமல் விட்டதாகக் கூறியது மிகுந்த பேசுபொருளானது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் வீரராக முச்சதமும் 7 விக்கெட்டுகளும் எடுத்தவராக உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட் கேரி சோபர்ஸ் 365 ரன்கள், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் 329 ரன்கள், 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இவர்களை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வியான் முல்டர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Summary

Wiaan Mulder becomes the first player to score a triple century and claim a seven-wicket haul in Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.