
கமலிடமிருந்து தான் பிரிந்து விட்டதாக கௌதமி செவ்வாய்க்கிழமை தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக குழப்பமான மனநிலையில் இருந்து, மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கெளதமி கூறியிருந்தார். இந்த முடிவை எடுப்பது மிகுந்த சிரமமாக இருந்தது என்றும், தனது மகளுக்கு சிறந்த தாயாக இருப்பதே தலையாய கடமையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
கெளதமியின் இந்த முடிவு குறித்து ஷ்ருதி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தனது மேலாளர் பெயரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரைப் பொருத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும்தான் பிரதானம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.