

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பிரேமம், தற்போது தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளப் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் வேடத்தில் ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். நாக சைதன்யா, ஷ்ருதி நடித்த இந்தப் படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது. தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
அதே தினத்தில் தமிழில் ரெமோ, றெக்க, தேவி ஆகிய படங்களும் வெளியாகின்றன. சென்னையிலும் பல திரையரங்குகளில் பிரேமம் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.