தானா சேர்ந்த கூட்டம்: சூர்யாவுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

சூர்யாவுடன் நடிப்பதில் செம சந்தோஷம். தானா சேர்ந்த கூட்டம் படத்தில்...
தானா சேர்ந்த கூட்டம்: சூர்யாவுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
Updated on
1 min read

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் சென்ற வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார்.

இதற்கு அடுத்ததாக, சூர்யாவை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கிறது. இது சூர்யாவின் 35-வது படமாகும். சூர்யா, ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதனையடுத்து அவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டுள்ளது. 

சூர்யாவுடன் நடிப்பதில் செம சந்தோஷம். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதமாக உள்ளது. விக்னேஷ் சிவன், ஸ்டூடியோ க்ரீனுக்கு நன்றி என்று இச்செய்தி குறித்து ட்வீட் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com