ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தெலுங்கு மகதீராவை ஹிந்தியில் ரீமேக் செய்கிறாரா பிரபுதேவா?

கருப்பு ராஜா, வெள்ளை ராஜா முடிந்ததும் ‘மகதீரா’ இந்தி ரீமேக் தொடங்கப் படலாமாம்.

News image
Updated On :25 அக்டோபர் 2016, 6:59 am

பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் விஜய்யின் தேவி படம் ரிலீஸ் ஆகி விட்டது. அடுத்து பிரபு தேவா என்ன செய்யவிருக்கிறார் என்பது தான் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் பிரபு தேவா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு!

தேவிக்குப் பிறகு விஷால் மற்றூம் கார்த்தியை வைத்து கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படம் இயக்கப் போவதாகவும். அந்தப் படம் முடிந்த பின் மெகா புராஜெக்டாக தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த எஸ்.எஸ். ராஜமௌலியின் 'மகாதீராவை' ஹிந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. மகதீரா தமிழில் ‘மாவீரனாக’ டப் செய்யப்பட்டு தெலுங்கு அளவுக்கு தமிழிலும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம். மலையாள டப்பிங்கிலும் இந்தப் படத்திற்கான வரவேற்பு அபாரமாகவே இருந்தது. 

Story image

பிரபு தேவாவுக்குப் படங்களை ரீமேக் செய்வது ஒன்றும் புதிதில்லை. முன்பே அவர் போக்கிரி, நுவ்வு ஒஸ்தானண்டே நேனு ஒத்தண்ட்டானா (தமிழில் சம்திங்,சம்திங்), விக்கிரமார்க்குடு (தமிழில் சிறுத்தை) முதலிய படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்தவர் தான். ஏனெனில் ஹிந்தியிலும் பிரபு தேவாவுக்கு கணிசமான அளவில் ரசிகர் கூட்டம் உண்டு. எனவே கருப்பு ராஜா, வெள்ளை ராஜா முடிந்ததும் ‘மகதீரா’ ஹிந்தி ரீமேக் தொடங்கப் படலாமாம். தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் மாவீரனாகக் கலக்கிய ’ராம் சரண் தேஜாவின்’ இடத்தை ஹிந்தியில் நடிகர் சாஹித் கபூர் நிரப்பலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.