இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ்ப் படம்!  

அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையத்தளங்களில் நேரடியாக காணும்...
இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ்ப் படம்!  
Published on
Updated on
1 min read

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையத்தளங்களில் நேரடியாக காணும் சுட்டியை ட்விட்டரில் வெளியிடுகிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் 'கர்மா'

கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கித்தில் உருவாகியுள்ள 'கர்மா' திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையத்தளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் வெளியிடப்படும் திரைப்படம்- 'கர்மா'.    

'கர்மா' திரைப்படம் சமீபத்தில் நடந்த Madrid International Film Festival-லில் உலகத் திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி Hollywood Sky Film Festival-லிலும் சிறந்த திரைப்படத்துக்கான தகுதி பெற்றது. 

'கவிப்பேரரசு' வைரமுத்து இப்படத்துக்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியுள்ளார். திரு. எல்.வி. கணேசன் இசையமைத்துள்ளார். இத்தகவல்கள் இப்படத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com