இயக்குநர் ஆனார் நடிகர் தனுஷ்! ராஜ்கிரண் கதாநாயகன்!

இயக்குநர் ஆனார் நடிகர் தனுஷ்! ராஜ்கிரண் கதாநாயகன்!

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பவர் பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Published on

இதுவரை ஒரு நடிகராக முத்திரை பதித்துவரும் தனுஷ், இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதன் அறிவிப்பை இன்று வெளியிட்டார். 

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பவர் பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரசன்னாவும் இதில் நடிக்கிறார். ஜோக்கர் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்துக்கு இசையமைக்கிறார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். பவர் பாண்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது.

கொடி, வடசென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, ஆங்கிலப் படம் என பல படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்தப் படத்தையும் தனுஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தான் படம் இயக்க உள்ளதாக அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com