இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெளியான ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவினரிடம், இந்த மூன்று வீரர்களும் ஒருநாள் அணிக்குப் பொருத்தமாக இல்லை என்று தோனி சொல்வது போல ஒரு காட்சி உள்ளது. உன்னை வளர்த்துவிட்ட வீரரை அணியிலிருந்து நீக்குகிறாயா என்று கேள்வி கேட்ட தேர்வுக்குழு உறுப்பினரிடம், நாமெல்லாம் நாட்டுக்காகப் பணியாற்றுகிறோம் என்று தோனி பதிலளிப்பது போலவும்
உள்ளது.
இதனையடுத்து அந்த 3 வீரர்களின் பெயர்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மூத்த வீரர்களை அந்தக் காட்சி குறிப்பிடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே பேட்டியளித்ததாவது:
அந்தக் காட்சி படத்தில் உள்ளது. அதேசமயம் அந்த 3 வீரர்களின் பெயர்களைச் சொல்லவேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அந்த 3 வீரர்கள் மீதான மரியாதைக்காகவும் பெயர்கள் குறிப்பிடப்பட்டால் அது தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாலும் அதைத் தவிர்த்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி, செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



