
கபாலி படத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் புதிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். அவர்களைத் தேர்வு செய்வதற்காக விளம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அனுப்புமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கணவர் அஷ்வினைப் பிரிந்து வாழும் செளந்தர்யா, விவாகரத்து கோர உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் இந்தப் பட அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. செளந்தர்யா, இதற்கு முன்பு கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.