
இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனக்குப் பெயர் வாங்கித் தந்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 9-ம் தேதி வெளிவருவதாக இருந்த சென்னை 28-2, ஜெயலலிதாவின் மறைவால் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமர்ப்பணம் என்கிற அறிவிப்புடன் திட்டமிட்டபடி நாளை வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.