தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம், தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.
ரஜினி - ஷங்கரின் 2.0 படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்தப் படம் ஜனவரி 25 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அக்டோபர் வெளியீடு, முதல் பார்வை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று மற்றும் பாடல் வெளியீடு ஆகஸ்ட் மாதம் என்கிற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அக்டோபர் 18 அன்று தீபாவளி. எனவே அன்றைய தினம் படம் வெளிவரவுள்ளது. புதன்கிழமை அன்று தீபாவளி. எனவே முதல் 5 நாள்கள் படத்துக்குப் பெரிய வசூல் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சமீபகாலமாக வேலாயுதம், துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு தீபாவளி அன்று வெளிவரவுள்ள விஜய் படம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


