பிரபாஸ் நடிக்கும் சாஹூ பட டீசர்!

பிரபாஸ் நடிக்கும் சாஹூ பட டீசர்!

சாஹூ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Published on

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படமான சாஹூ, ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. 

யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்தினிடையே இப்படத்தின் டீசரும் வெளியிடப்படவுள்ளது. 

பெரிய பட்ஜெட் என்பதற்கு உதாரணம்: ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ. 35 கோடி வரை செலவு செய்ய உள்ளார்கள். டை ஹார்ட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குநரான கென்னி பேட்ஸ், இப்படத்தில் பணியாற்றுகிறார். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாஹூ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com